முதலமைச்சரின் அமெரிக்க பயணம் ஒரு மகத்தான பயணமாக இருக்கும் அமைச்சர் டி ஆர் பி ராஜா திருவாரூரில் பேட்டி
முதலமைச்சரின் அமெரிக்க பயணம் ஒரு மகத்தான பயணமாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் ஒரு வரலாற்று பயணமாக இருக்கும் என தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா திருவாரூரில் பேட்டி.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களுடன் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா…
முதலமைச்சரின் அமெரிக்க பயணம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணமாக அமையும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். முதல்வர் மாவட்டமான திருவாரூர் மாவட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது விரைவில் மாநிலத்தில் முதல் மாவட்டமாக மாறும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் மட்டும் 1500 கோடி ரூபாய்க்கு மேல் பணம் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் சொன்னதில் 75 சதவீதம் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளின் வேலை விமர்சனம் செய்வது, எங்கள் வேலை முதலீடுகளை கொண்டு வந்து குவிப்பதாகும்.
அமெரிக்கா பயணத்தின் போது முக்கியமான நிறுவனங்களோடு கையெழுத்திட உள்ளோம். தமிழ்நாட்டிற்கு வராத பல நிறுவனங்களும் காத்திருக்கின்றன. முதல்வரின் அமெரிக்க பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மகத்தான பயணமாக இது அமையும் என்றார்.