கிறிஸ்தவர்களின் புனித தவக்கால சாம்பல் புதன் தொடங்கியது
இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெற்ற தினத்தை கிறிஸ்தவ மக்கள் 40 நாட்கள் தவக்கால விரதமிருந்து அசைவம் ஆடம்பர செலவுகளை தவிர்த்து, சிலுவைபாடு நடைபயணம் மேற்கொண்டு ஏழைகளுக்கு உதவிசெய்து இறைவனை வழிபடுவதன் தொடக்க நாளாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது.
40 நாட்கள் தவக்கால வழிபாட்டை சிறப்பு பிராத்தனையுடன் கிறிஸ்தவர்கள் இன்று முதல் தொடங்கினர்.
அதன்படி நெல்லையில் உள்ள பழமையான தேவாலயமான பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் மறை மாவட்ட பேராயார் அந்தோனிசாமி தலைமையில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது.
சிறப்பு திருப்பலியில் ஆயர் இறையுரையாற்றிய பின்னர் வழிபாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மக்களுக்கு சாம்பலால் சிலுவை வரைந்து அவர்களை தவக்காலத்திற்கு ஆயத்தப்படுத்தி ஆசீர்வாதம் செய்தார்.
திருப்பலியில் திரளான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாம்பலால் நெற்றியில் சிலுவை வரைந்து தவக்கால விரதத்தை தொடங்கினர்.