in

நகைச்சுவை நூலை மூத்த பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் மதன் வெளியிட்டார்


Watch – YouTube Click

நகைச்சுவை நூலை மூத்த பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் மதன் வெளியிட்டார்

 

எழுத்தாளர் புதுவை ரா. ரஜனி எழுதிய சுப்புசாமி கதைகள் என்ற நகைச்சுவை நூலை மூத்த பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் மதன் வெளியிட்டார்.

எழுத்தாளர் புதுவை ரா. ரஜனி எழுதிய சுப்புசாமி கதைகள் என்ற நகைச்சுவை நூல் வெளியீட்டு விழா, சென்னை, மயிலாப்பூர் கிளப் வளாகத்தில் நடைபெற்றது. விகடகவி மின்னிதழ் ஆசிரியர் கார்ட்டூனிஸ்ட் மதன் தலைமை ஏற்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியை சுபா வெங்கட் தொகுத்து வழங்கினார். ஓவியர் அரஸ், கார்ட்டூனிஸ்ட் மணி ஶ்ரீகாந்தன், ஜாசன், ராஜேஷ் கண்ணா, இயக்குனர் குமார், ஆகியோர் வாழ்த்துரை மற்றும் பாராட்டுரை வழங்கினர்.

விழாவில் மூத்த பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் மதன் பேசுகையில், “தமிழில் நகைச்சுவையாக எழுதும் எழுத்தாளர்கள் குறைவாக உள்ளனர். ஆங்கிலத்தில் இன்றும் நகைச்சுவை இலக்கியம் படைப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

சீரியசான விஷயத்தையும் நகைச்சுவையாய் எழுதப் பழகிக்கொள்ள வேண்டும். சாவி, பாக்கியம் ராமசாமிக்குப் பிறகு தமிழில் நகைச்சுவையாக எழுதுபவர்கள் இல்லை. எழுத்தாளர்கள் நகைச்சுவை இலக்கியம் படைக்க பயிற்சிபெற வேண்டும்…!” என்றார்.நிகழ்ச்சி முடிவில் எழுத்தாளர் புதுவை ரஜனி ஏற்புரை வழங்கினார்.


Watch – YouTube Click

What do you think?

ஜம்மு காஷ்மீரில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் சொந்த ஊரில் உற்சாக வரவேற்ப்பு

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் ‘Boycott Netflix’