புதுச்சேரி விமான சேவை ஜுலை 1ந் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் – அக்டோபர் மாதம் துவங்கும் என நிறுவனம் தகவல்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் கடந்த 2013 ஜனவரியில் திறக்கப்பட்டது.புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட 2013 ஜனவரி முதல் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன் அறிவிப்பு ஏதுமின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப்பட்டது.மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த 2017ல் புதுச்சேரியிலிருந்து ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.பின்னர் கொரோனா காலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.பின்னர், மீண்டும் விமான சேவை தொடங்கியது. புதுச்சேரி விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்படத் தொடங்கின.இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூரூ, ஐதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30ந்தேதியுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுத்தியது.
மார்ச் 31ந் தேதி முதல் விமானங்கள் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படாமல் இருந்தன.இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளாக விமானசேவை தொடங்க திட்டமிட்டிருந்த இண்டிகோ நிறுவனத்துக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி புதுச்சேரியில் இருந்து பெங்களூரூ, ஐதராபாத்துக்கு விமான சேவையை இந்த நிறுவனம் ஜூலை 1ந் தேதி தொடங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது ஆனால் தற்பொழுது அக்டோபர் மாதம் தான் துவங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மூன்றாவது திருப்பதி அல்லது கொச்சினுக்கு விமான சேவை துவங்க இருக்கிறது.ஏர்சபா விமான நிறுவனம் 19 பேர் பயணிக்க கூடிய சிறிய ரக விமானத்தை 1500 ரூபாய்க்கு குறைவாக புதுச்சேரி-சென்னை இடையே தினமும் ஐந்து முறை இயக்கு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்…