in

மதுரையில் வரும் 9 ம்தேதி நடைபெறுவது பட்டா தரும் விழா இல்லை. உதயநிதி ஸ்டாலின் என்ற இளவரசருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் விழா.

மதுரையில் வரும் 9 ம்தேதி நடைபெறுவது பட்டா தரும் விழா இல்லை. உதயநிதி ஸ்டாலின் என்ற இளவரசருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் விழா.

கர்நாடகா துணைமுதல்வர் சிவகுமார் மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கும் நன்மை நடக்கும் என பேசி்யுள்ளார். அது குறித்து திமுக அரசு வாய்திறக்காமல், காங்கிரஸ் கூட்டணி கட்சி என மவுனித்து வருகிறது.

ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரை பாலமேட்டில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது இந்த முகாமில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது
பேசியதாவது

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை மலர்ந்தே தீரும். எடப்பாடியார் அரியணையில் ஏறி முதல்வராக அமர்வார்.

மதுரையில் வரும் 9 ம்தேதி நடைபெறுவது பட்டா தரும் விழா இல்லை. உதயநிதி ஸ்டாலின் என்ற இளவரசருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் விழா

முல்லை பெரியார் அணையை ஆய்வுசெய்ய மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேட்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களின் வாழ்வாதார பிரச்சினையான முல்லை பெரியாறு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல் அமைச்சர் அமெரிக்கவில் உள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மலேசியா சென்றுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலினும் வாய்திறக்கவில்லை. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழ் நாடு பாலைவனமாகும் என்பதால் டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஆனால் கரநாடகா துணைமுதல்வர் சிவகுமார் மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கும் நன்மை நடக்கும் என பேசி்யுள்ளார். அது குறித்து திமுக அரசு வாய்திறக்காமல், காங்கிரஸ் கூட்டணி கட்சி என மவுனித்து வருகிறது.

பார்முலா கார் ரேஸ் நடத்துவதால் பொது மக்களுக்கு விலை வாசி குறைந்து விடுமா? நேற்று நடை பெற்ற பட்டாவழங்கும் விழாவில் முறையாக தகுதியானவர்களுக்கு பட்டா வழங்காததால் பொது மக்கள் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் முற்றுகையிடும் நிலைதான் திமுக ஆட்சியில் உள்ளது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களுக்கு ஸடிக்கர் ஒட்டும் வேலையைதான் திமுகவினர் செய்து வருகின்றனர். மகளிர் உதவி தொகை வழங்குவதிலும் முழுமையாக வழங்கவில்லை. திமுக அரசில் காவல்துறை துணை கண்காண்காணிப்பாளருக்கே பாதுகாப்பு இல்லை நிலைமை இப்படி இருந்தால் பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.

தமிழ்நாடு ரவுடிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வாய்திறக்கவில்லை.

திமுக ஆளும்கட்சியாக இருந்து கொண்டும், 39 எம்பிக்களையும் கையில்வைத்துகொண்டும் மத்திய அரசிடம் கல்விநிதி, நிவாரண நிதியும் வாங்குவதற்கு திறமையில்லை. நிர்வாக திறன்ற்ற அரசாக உள்ளது.

பாரம்பரியாமான ஜல்லிகட்டு நடைபெற அந்தந்த ஊர்களில் வாடிவாசல் உள்ள போது செயற்கையான மைதானம் எதற்கு, அப்பா கருணாநிதி பெயரில் நூலகம் எதற்கு இப்படி அரசின் கஜானாவை காலி செய்து திறமையற்ற ஆட்சி நடத்துகின்றனர்.இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

இன்றைக்கு பெண் டிஎஸ்பியை சிலர் தாக்கியுள்ளனர், காவல்துறை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதுவரைக்கும் கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை, இச்சம்பவம் கேள்விப்பட்டவுடன் அரை மணி நேரத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று எடப்பாடியார் அறிக்கை வெளியிட்டார். இன்றைக்கு காக்கி சட்டை மீது ரவுடிகளுக்கு பயம் போய்விட்டது.

ஜனநாயக நாட்டில் விஜய் அவர்கள் புதிதாக கட்சி துவங்கி முதல் மாநாடு நடத்துகிறார் ஆனால் திமுக அரசு உரிய அனுமதியும் வழங்காமல் பாடாய்ப்படுத்தினால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது

What do you think?

பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் சிங்கம் புலி,பசு ,மயில் சத்ரபதி சிவாஜி உருவத்தில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள்

வாவாநகரம் வனப்பகுதியில் காட்டு யானை அட்டூழியம். 1200 ரோபஸ்டா வாழை மரங்கள் சேதம்.