ஒரு பத்திரிகையின் விலை மட்டும் ரூ.5,000யாம்…
அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் தம்பி ராமையா மகன் உமாபதியும் காதலித்த நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் சென்ற ஆண்டு கோலாகலமாக நடந்தது முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் திருமணம் நடைபெறாமல் இருக்க இவர்களின் திருமணம் எப்பொழுது என்ற எல்லோரின் கேள்விக்கும் அர்ஜுன் தான் கட்டி வரும் அனுமார் கோயில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு தான் மகளின் திருமணம் என்று ராமையாவிடம் கூறினாராம்.
கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக முடிந்த நிலையில் வருகிற ஜூன் பத்தாம் தேதி கெருகம்பாக்கத்தில் அர்ஜுனனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர்களின் திருமணம் நடக்க இருக்கிறதாம்.
இந்த திருமணத்திற்கு அர்ஜுன் தானே பிரதியேகமாக டிசைன் செய்த பத்திரிக்கையை தற்பொழுது எல்லோருக்கும் கொடுத்துக் ஆச்சரிய படுத்தி வருகிறார்.
அப்படி என்ன இந்த பத்திரிக்கையில் சிறப்பு …இன்னா கேட்கிரீங்க இந்த பத்திரிகை ஒரு பாக்ஸ் வடிவில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது ஒரு பத்திரிகையின் விலை மட்டும் ரூ.5,000யாம்…