நாட்டின் 76 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்; 21 பயனாளிகளுக்கு 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிது. அதன்படி நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை, தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதான புறாவை பறக்கவிட்ட ஆட்சியர், நிகழ்ச்சியில் 21 பயனாளிகளுக்கு 1 கோடி 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளிட்ட அனைத்துதுறை அரசு உயர் அதிகாரிகள், பொது மக்கள் , மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.