in

தற்போதைய கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் தே மு தி க சுதீஷ் பேச்சு


Watch – YouTube Click

தற்போதைய கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் தே மு தி க சுதீஷ் பேச்சு

 

தஞ்சையில் அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரான சிவனேசன் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தேமுதிக துணை பொது சயலாளர் சுதீஷ் அ.தி.மு.க, தே.மு.தி.க. கூட்டணி தான் உண்மையான கூட்டணி. 2011-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தே.மு.தி.க. கூட்டணி 206 தொகுதிகளில் வென்று மாபெரும் வெற்றி பெற்றது .

ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால் அதனை யாரும் மாற்ற முடியாது. அவர் எடுக்கும் முடிவு தெளிவாக இருக்கும். அதேபோல் விஜயகாந்த் வாக்கு கொடுத்து விட்டால் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

அதன்பிறகு நடந்த தேர்தல்களில் சில கருத்து வேறுபாடுகளால் கூட்டணி அமைக்க முடியவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக ஆகியிருப்பார்.

தற்போது மீண்டும் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

இதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடர வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஒற்றுமையாக செயல்பட்டாலே மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவது உறுதி.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது போல் தற்போதும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். சாதாரண மனிதர். சிவனேசன் வெற்றி பெற்றால் இவர் மட்டும் எம்.பி. அல்ல.

சாதாரண மக்கள் அனைவரும் எம்.பி.கள் தான் . தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்து வைப்பார் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி ஆரோவில்லில் 25வது தேசிய குதிரையேற்ற போட்டி

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா முழுவதும் போதை ஊசிகள் அதிகரித்துவிட்டது