தனுஷ்- நயன்தாரா மோதல் என்பது இந்தியா கிரிக்கெட் மேட்ச் போன்று இன்ட்ரஸ்டா இருக்கு
விஜயின் அரசியல் எழுச்சி பிரமாதமாக இருக்கிறது,அவர் திமுகவை எதிர்ப்பது தான் சரி
புதுச்சேரியில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேட்டி
இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் உலகில் மிகச் சிறந்த மனிதர் அவருடைய விஷயத்தை பெரிது படுத்திருக்க கூடாது
சினிமா உலகில் பெண்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் எனவும் பார்த்திபன் பேட்டி
புதுச்சேரியில் கொரோனா காலத்தின் போது புதுச்சியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பிற்கு 22 ஆயிரமும் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 17 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த நடிகர் பாக்கியராஜ் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
அதன்படி சினிமா படப்பிடிப்பிற்கு 28 ஆயிரத்திலிருந்து 17,000 ரூபாயாகவும், சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 18 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்
இந்த நிலையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்திருந்த இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சினிமா படப்பிடிப்பு கட்டணங்களை குறைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சினிமா படபிடிப்பு கட்டணங்களை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன்…
சினிமா படப்பிடிப்பு கட்டணங்களை குறைத்ததற்கு முதலமைச்சர் ரங்சாமிக்கு நன்றி தெரிவித்ததாகவும் மேலும் சினிமா கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பார்த்திபன்…
தனுஷ், நயன்தாரா மோதல் என்பது இந்தியா பாகிஸ்தான் மேட்ச் பார்ப்பது போன்று இன்ட்ரஸ்டிங்கா இருந்ததாக தனது கருத்தை தெரிவித்தார்.
சினிமா துறையில் விவாகரத்து அதிக அளவில் பெருகி வருவதற்கு விவாக வருடம் என்பதை விவாகரத்து வருடமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்த பார்த்திபன், ஏ. ஆர். ரகுமான் உலகில் மிகச் சிறந்த மனிதர் அவருடைய குடும்ப விவகாரத்தை யாரும் பெரிதுபடுத்தி இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து, அது வருத்தமும் அளிக்கிறது என்றார்.
நடிகர் விஜய் குறித்த அந்த கேள்விக்கு பதில் அளித்த பார்த்திபன்…
விஜய் அரசியல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது முதல் மாநாடு பிரமாதமாக இருந்தது விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று, என்று குறிப்பிட்ட பார்த்திபன்…
திமுகவை விஜய் எதிர்ப்பது தான் சரியான விஷயம் ஏனென்றால் எம். ஜி. ஆர். போன்றவர்கள் ஆளுங்கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்து இருக்கிறார்கள் ஆளுங்கட்சியை எதிர்த்தால் தான் கதாநாயகனாக வர முடியும் என்றார்.
சினிமா உலகில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு உள்ளது எப்போதும் ஆண்கள் தான் பலவீனமானவர்கள் பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள் தான், பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை அவர்கள் அவர்களே பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.