கேரவனுக்குள்….நுழைந்த இயக்குர்
அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே இவர் தமிழிலும் கொரில்லா, 100 சதவீத காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது தனுஷ்ன் இட்லி கடை படத்திலும் நடித்து வருகிறார். இவர் என்னுடைய இத்தனை வருட சினிமா பயணத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எனக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர்.
நான் தென்னிந்திய மொழி படம் ஒன்ரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனரின் செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன் நான் கேரவனில் உடைமாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னிடம் அனுமதி கேட்காமலேயே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து விட்டார் நான் கோபதில் கத்தி நீங்கள் செய்தது தவறு என்று கூறினேன். அதற்கு அவரோ எனக்கு தவறாக தெரியவில்லை என்று கூறியவுடன்’ அதிர்ந்தேன்.