in

மங்கைநல்லூரில் நடைபெற்ற முதல்வரின் மக்கள் முகாம் நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு


Watch – YouTube Click

மங்கைநல்லூரில் நடைபெற்ற முதல்வரின் மக்கள் முகாம் நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

தமிழக மக்கள் வருவாய் துறை காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மனுக்கள் அளித்து அதை உடனடியாக தீர்வு காணும் வகையில் மக்களை தேடி முதல்வர் என்ற சிறப்பு முகாம்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஒன்றியங்களிலும் எட்டு பஞ்சாயத்துகளுக்கு ஒரு முகாம் என்ற ரீதியில் தொடர்ந்து இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன கணினி மற்றும் இணையதள சேவை மூலம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர்.

இன்று குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கையநல்லூரில் தத்தங்குடி, மங்கைநல்லூர் பெருஞ்சேரி கப்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான மக்கள் முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அங்கு ஆய்வு பணியை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பொதுமக்கள் மனுக்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள தீர்வு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமா மகேஸ்வரி சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி ஷோபனா திருமதி புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற “மண் உரிமை மற்றும் விதை பந்துகள் தயாரிப்பு

நிலத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார்