in

வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்


Watch – YouTube Click

கீழ்வேளூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு.

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சற்று தாமதமாக வாக்கு பதிவு துவங்கி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா? எனவும், வாக்காளர்கள் அனைவரும் எந்தவித அச்சமும் இன்றி வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி செல்லுங்கள் என அறிவுறுத்தினார். தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் வாக்கு சாவடி நிலைய அலுவலர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தினை ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்

கருப்புக் கொடி கட்டி வாக்களிக்க செல்லாமல் புறக்கணிப்பு