திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செண்பகத் தோப்பு அணையை விவசாயத்திற்காக வினாடிக்கு 105 கன அடி வீதம் நீரை திறந்து விட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையைத் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்
போளூர் அடுத்த செண்பகத்தோப்பு அணை ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அணையை சுற்றி சந்தவாசல், காணமலை, படவேடு, குப்பம், காளசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் வறட்சியால் பாதிப்படைந்து விவசாயம் பாதித்து வருகின்றன.
இந்நிலையில் விவசாய கிணறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் நீரின் ஆதாரமும் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் பெரியளவு பாதிப்படைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செண்பகத் தோப்பு அணையை இன்று முதல் வரும் 11/5/2024 வரை 12 நாட்களுக்கு தொடர்ச்சியாக வினாடிக்கு 105 கன அடி வீதம் 8350.40 ஏக்கருக்கு விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறும் வகையில் அணையை திறந்து விட்டார்.
மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :
திருவண்ணாமலை மாவட்ட முழுவதும் உள்ள 697 ஏரிகளில் உள்ள நீரின் சதவீதத்தை குறித்து விவரமாக எடுத்து கூறினார்.
அதனைத் தொடர்ந்து செண்பகத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சார விற்பனை அதிகரித்து வருவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் எனக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தகவலை ரகசியமாக தெரிவியுங்கள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து தொடர்ந்து பேசினார்.