தஞ்சையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்து வந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டியை அகற்ற உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் வெற்றிகரமாக அகற்றி மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த 4 தேதி திருவையாறு அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்த மகா அப்பிலேஷ் பேகம் 62 என்ற பெண் தனக்கு உதிர்கன்னி உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்க வந்தார். அப்போது அவரது வயிறு வழக்கத்தை விட பெரிதாக இருப்பதை பார்த்த மாவட்ட ஆட்சியர் என்ன என்று கேட்டதற்கு சிறுவயதில் இருந்து வயிறு வீங்கியுள்ளதாக தெரிவித்தார் உடனடியாக மருத்துவரை கொண்டு பரிசோதிக்க உத்தரவிட்டார் இதற்கு அந்த பெண் மறுத்த நிலையில் மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுத்து பின் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . பின்பு அவரது வயிற்றில் இருந்து 30 கிலோ கட்டி அகற்றப்பட்டது.
தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பாராட்டினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே பாட்டிலில் பிறந்த குழந்தை இறந்த நிலையில் இறந்திருப்பது வேதனை அளிப்பதாகவும் குழந்தை வேணாம் என பெற்றோர்களோ அந்த பெண்ணோ எண்ணினால் தஞ்சை மாவட்ட மருத்துவர் களையோ அல்லது அரசு ஊழியர்களை அணுகி தங்கள் தகவலை தெரிவிக்காமல் தொட்டில் குழந்தை திட்டத்தின் விட்டு விட்டால் மாவட்ட நிர்வாகம் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக் கொள்ளும் இதற்காக குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசுவதோ அந்த குழந்தையை அளிக்க நினைக்கிறதோ வேண்டாம் என கேட்டுக்கொண்டார் இதற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனங்கள் நான்கு தொட்டில்கள் வழங்கினர்.