in

வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு….


Watch – YouTube Click

வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு….

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போளூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் மையங்களில் வைக்கப்படும் இயந்திரத்தில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யார் ஆகிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனைத்து வாக்குப்பதவு இயந்திரங்களும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி இன்று நடைபெற்று வருகிறது, அந்த வகையில் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணியினை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

அரியலூரில் தென்பட்ட சிறுத்தை மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தையா

குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது