பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
இந்தியாவில் நாடாளுமன்ற பொது தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று காலை 08.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் தளாவபாளையம் அமைந்துள்ள ஆர்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
மேலும் வாக்கு என்னும் மையத்தில் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று மாலை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் வாக்கு என்னும் மையத்திற்கு பாதுகாப்பு பணியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் 02 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 07 காவல் துறை கண்காணிப்பாளர்கள், 22 காவல் ஆய்வாளர்கள், 97 உதவி காவல் ஆய்வாளர்கள், 373 சட்ட ஒழுங்கு காவலர்கள், 24 போக்குவரத்து காவலர்கள், 63 ஆயுதப்படை காவலர்கள், 39 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 153 ஊர்காவலர் படையினர், 24 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட மொத்தம் 804 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கரூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை காலை 7 மணி முதல் தீவிர கண்காணிக்குப் பிறகு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வாக்கு என்னும் மையத்திற்கு உள்ளே அனுப்பப்படும் என பாதுகாப்பணியில் ஈடுபட்டு வரும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.