in

ஒரு அலுவலக உதவியாளரை கூட அனுப்ப முடியவில்லை என்று லெப்ட் ரைட் வாங்கிய மாவட்டம் வருவாய் அலுவலர்

பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வராத காரணத்தால், பெரும்பாலான அதிகாரிகள் வராத காரணத்தால் வெறிச்சோடிய கூட்டம் , ஒரு அலுவலக உதவியாளரை கூட அனுப்ப முடியவில்லை என்று லெப்ட் ரைட் வாங்கிய மாவட்டம் வருவாய் அலுவலர் 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திரு மகாபாரதி சென்று விட்டதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வராததை தெரிந்து கொண்ட பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஒவ்வொரு துறையாக அதிகாரிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மைக்கில் அழைத்தார். ஆனால் ஒருவரும் வரவில்லை இதனால் கடுப்பான மாவட்டம் வருவாய் அலுவலர் இன்றைய தேதியில் அலுவலக உதவியாளர் கூட கணினி தேர்ச்சி பெற்றுள்ளனர் அவர்களை கூட அனுப்ப பல அதிகாரிகளுக்கு மனம் இல்லை என்று வேதனையுடன் கண்டித்தார். இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது

What do you think?

கொள்ளிடம் ஆற்றின் கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் கரையிலேயே காத்து கிடக்கும் பொதுமக்கள்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (05.08.2024) | Britain Tamil Europe News | UK News | london news