in

திமுக வேட்பாளர் முரசொலி மாவட்ட ஆட்சியரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை பெற்றார்


Watch – YouTube Click

திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் – மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் வெற்றி பெற்றதற்க்கான சான்றிதழ் வழங்கினார்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. ஆறு தொகுதிகளிலும் 23 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முரசொலி 5,02,245 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் சிவநேசன் 1,82,662 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் 1,70,613 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 1,20,293 வாக்குகள் பெற்றனர்.

இதன் மூலம் 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் – மாவட்ட ஆட்சியிருமான தீபக் ஜேக்கப் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.


Watch – YouTube Click

What do you think?

கல்கி 2898 AD trailer ரிலீஸ் தேதியை அறிவித்த பட குழுவினர்

சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையிடம் கோரிக்கை