15 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள் கண்டு கொள்ளாத மின்சார வாரிய அதிகாரிகள்
15 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள் 370 ஏக்கர் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை கண்டு கொள்ளாத மின்சார வாரிய அதிகாரிகள்
திருச்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது, அதில் புங்கனூர், தாயனூர், கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் சாய்ந்ததுடன், உடைந்தும் காணப்படுகிறது.
மின்கம்பங்கள் சாய்ந்ததால் 15 நாட்களாக மின்சாரம் இல்லாமல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், அறுவடைக்கு தயாராக உள்ள 370 ஏக்கர் பரப்பிலான நெல் மற்றும் மக்காச்சோளம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் சாலைகள் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதால் மின்வாரிய அதிகாரிகளும் விவசாயிகள் புகார் அளித்தும் கண்டும் காணாமல் இருப்பதுடன் மின்கம்பம் மாற்றம் செய்ய 27 ஆயிரம் பணம் கேட்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.