நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கதுறை அதிரடி சோதனை
சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகரின் வீடு மற்றும் ஐந்து இடங்களில் அமலாக துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
ரவீந்தர் கடந்த 2020 ஆம் ஆண்டு திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கலாம் என்று சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவரை ஏமாற்றி 16 கோடி மோசடி செய்ததாக ரவீந்தர் மீது வழக்கு பதிவிட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் ஜாமனில் வெளியே வந்தார்.
தற்பொழுது இந்த மோசடியில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக துறைக்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக கூறி சென்னையில் வசிக்கும் ரவீந்திரனின்’ அடுக்குமாறு குடியிருப்பு மற்றும் அவருடைய அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7:00 மணிக்கு தொடங்கி இரவு வரை நடந்த இந்த சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாகவும் அது பற்றிய தகவல்களை அமலாகத்துறை இன்னும் வெளியிடவில்லை.