in

குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் நிலை குறித்து தகவல் தெரியாத நிலையில் குடும்பத்தினர் தவிப்பு


Watch – YouTube Click

குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் நிலை குறித்து தகவல் தெரியாத நிலையில் குடும்பத்தினர் தவிப்பு

 

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியிருந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் தீபரவியதில் 42 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம். தியாகி இப்ராஹீம் தெருவை சேர்ந்த முகமது ஷரிப் என்பவர் கடந்த 14 வருடமாக சில்வர் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தங்கி இருந்துள்ளார்.

முகமது ஷெரிப் சிகிச்சை பெறும் புகைப்படம் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அவரது குடும்பத்தினர்கள் அது முகமது செரிபின் புகைப்படம் அல்ல என மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முகமது ஷெரிப் குறித்து நேற்று முதல் மனைவி மற்றும் உறவினர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வரும் நிலையில் தொலைபேசியை ஷெரிப் எடுக்காத நிலையில் அவரது நிலை குறித்து அறிய முடியாமல் எவ்வித தகவலும் தெரியாமல் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

எனவே முகமது ஷெரிப் குறித்து தகவலை மத்திய மாநில அரசுகள் வெளிநாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர் குறித்து தகவலினை அக்குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அவரது மனைவி பாத்திமா பேசுகையில் என் கணவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை ஆனால் என் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என கூறுகின்றனர். இதை என்னால் நம்ப முடியவில்லை அப்படி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தால் என் கணவருக்கு உரிய சிகிச்சை அளித்து மத்திய அரசும்,மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்புடன் என் கணவரை தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றார்.


Watch – YouTube Click

What do you think?

தொடரும் அரசின் அலட்சியம் அச்சத்தில் பள்ளி மாணாக்கர்கள்

நெல்லை ஜெயக்குமார் வழக்கு மீண்டும் தீவிரமடைந்தது சிபிசிஐடி ஏடிஜிபி ஐஜி எஸ்பி ஆகியோர் முகாம்