நடிகர் கார்த்தியை வம்பில் மாட்டி விட்ட பிரபல ஆங்கர்
திருப்பதி லட்டு சம்பந்தமாக பவன் கல்யானிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்திக்.
அண்மையில் மெய்யழகன் படத்தின் Promotion ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்பொழுது ஆங்கர் திருப்பதி லட்டு பற்றி நடிகர் கார்த்தி இடம் கேட்டார் பதில் அளிக்க மறுத்த கார்த்தியை வற்புறுத்தி மீண்டும் மீண்டும் கேட்டதால் இது சென்சிட்டிவான விவகாரம் இதைப் பற்றி நாம் பேச வேண்டாம் என்று கூறிய பொழுது அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.
இந்த பதிலால் கண்டான ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சினிமா நிகழ்ச்சியில் லட்டு பற்றி பேசி கிண்டல் செய்வீர்களா? என்று கோபமாக கேள்வி எழுப்பினார்.
திருப்பதி லட்டு சென்சிட்டிவான விவகாரம் என்று எப்படி கார்த்தி கூறுவார். நடிகர் என்பதால் நான் மரியாதை கொடுப்பேன் ஆனால் தர்மம் என்று வரும் பொழுது வார்த்தையை யோசித்துப் பேச வேண்டும் என்று நடிகர் கார்த்தியை கடுமையாக விமர்சித்துள்ளார் பவன் கல்யாண்.
இவரின் கண்டனுத்துக்கு நடிகர் கார்த்தியும் மன்னிப்பு கேட்டு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது, பவன் கல்யாண் அவர்களே நான் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன் நான் தவறாக பேசியதாக நினைத்தால் அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் வெங்கடேஸ்வர ராவின் பக்தனான நான் எப்பொழுதும் கலாச்சாரத்தையும் பக்தியும் கடைபிடிப்பவன் என்று கூறியுள்ளார்.
பவன் கல்யானின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏனென்றால் தெலுங்கு தேசத்திலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு தனது மெய்யழகன் படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகப்போகிறது நேரத்தில் இந்த சர்ச்சை எதற்க்கு என்று நாசுக்காக மன்னிப்பு கேட்டு ஒதுங்கி விட்டார்.
ஆனால் இதில் கார்த்தியின் தவறு எதுவும் இல்லை ப்ரோமோஷன் போது லட்டு மீம்ஸ் ஒன்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்கிறார்கள் ஆனால் அந்தப் பிரச்சனையை நடிகர் கார்த்திக் நாசுக்காக தவிர்திருகிறார், ஆனால் ஆங்கர் அவரை வர்புறுத்தி கமெண்ட்ஸ் கொடுக்க வைத்ததால் அதுவே அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.