பணம் வாங்காமலா…அப்படி நடிச்சிருக்காறு… ரட்சிதா..வை வெளுத்து வாங்கிய பிரபல பத்திரிகையாளர்
ஜே.எஸ்.கே எழுதி இயக்கிய தமிழ் கிரைம் த்ரில்லர் படமான ஃபயர், பிப்ரவரி 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.
பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் தயாரித்துள்ளார்.
நாகர்கோவில்..லில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்க பட்ட க்ரைம் த்ரில்லர் படம், ஒரு பிசியோதெரபிஸ்ட் காணாமல் போனதைப் பின் தொடர்கிறது கதை.
போலீசார் விசாரிக்கும்போது, மறைக்கப்பட்ட பல மர்மங்கள் வெளிவருகிறது, பாலாஜி முருகதாஸ் துணிச்சலுடன் இந்த பாத்திரத்தில் நடித்தற்கு பாராட்டலாம். பெண்களுக்கான Awareness படமானாலும் உச்சகட்ட கிளாமர் இருப்பதால், படத்தை குடும்பத்தினருடன் சென்று பார்க்க முடியாது.
மெதுவா மெதுவாய் பாடல் வெளியான பிறகு ரட்சிதாவுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த பாடலில் ஓவர் கிளாமராக நடித்திருந்தார் ரட்சிதா, ஆனால் ரட்சிதா நான் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்த படம் குறித்து விமர்சனம் செய்த பத்திரிகையாளர் சேகுவேரா, ரட்சிதா மட்டுமல்ல படத்தில் நடித்த நடிகைகள் எல்லாருமே Over கிளாமராக நடிச்சிருக்காங்க.
ரட்சிதா நான் பணத்திற்காக நடிக்கவில்லை என்று சொன்னார்….அப்போ சமூக சேவைக்காக..வா? இப்படி நடிச்சாரு. பணம் வாங்காமல் நான் இந்த படத்தில் நடிச்சேன்..ன்னு சொல்ல சொல்லுங்க அவரை குடும்பதோடு பார்க்குற படமா இது….. என்று ரட்சிதாவை நைய புடைத்திருகிறார்.