in

விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை.

நெல்லை மாவட்டத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் அவர்கள் சிகிச்சை பெறவும் உரிய நிவாரணம் கிடைக்கு ஏதுவாகவும் விவசாயிகளுக்கென பிரத்தியேக மருத்துவமனையை உருவாக்க நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை.

நெல்லை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெரும்பான்மையாவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது கடந்த சில மாதங்களாக விளைநிலங்களுக்குள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளையும் அவ்வப்போது தாக்கி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு களக்காடு பகுதியில் காட்டுப்பன்றி தாக்கி விவசாயி ஒருவரும் திருக்குறுங்குடி பகுதியில் கரடி தாக்கி விவசாயி ஒருவனும் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுபோக மலை அடிவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வனவிலங்குகளால் விவசாயிகள் தாக்கப்பட்டு லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் விவசாயிகள் சிகிச்சை பெரும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க து.தலைவர் பெரும்படையார் பல்வேறு கோரிக்கைகளை அடங்கியமனு அளித்தார்.

What do you think?

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட மனநல ஆலோசகர் கைது

கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு