அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகாசிவராத்திரி உற்சவம்
மாசி மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் ராமநாத சுவாமி நந்தி மண்டபம் பின்புறமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான சிவ பக்தர்கள் பங்கேற்பு.
தீர்த்த மூர்த்தி ஸ்தலம் என்ற முப்பெருமையை கொண்ட அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகாசிவராத்திரி உற்சவம், ஆடி திருக்கல்யாணம் வைபவம் ஆகிய இரண்டு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களாகும்.
அவ்வாறு இன்று மாசி மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் நந்திமண்டபம் பின்புறம் உள்ள தங்க கொடிமரத்தில் காலை 11 மணி அளவில் மேஷ மேஷ லக்னத்தில் வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க மேல வாத்தியங்களுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
பிப்ரவரி 18 ஆம் தேதி இன்று துவங்கி 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா மார்ச் – 1 ம் – தேதி வரை நடைபெறும்.
ராமநாதசுவாமி திருக்கோவில் தினந்தோறும் சுவாமி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் தோன்றி ராமநாத சுவாமி திருக்கோவிலின் 4 ரக வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான வெளி மாவட்ட வெளி மாநில பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர்.