in

நெல்லையப்பர் திருக்கோவில் தேர்களை தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்தனர்


Watch – YouTube Click

நெல்லையப்பர் திருக்கோவில் தேர்களை தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்தனர்

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆணி தேரோட்டம் வரும் 13ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்களையும் தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆணி தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட ஐந்து தேர்தல் நெல்லையப்பர் திருவிழா சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின் போது நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் வலம் வரும்.

சுமார் 450 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் 90 அடி உயரம் கொண்டது முழுக்க முழுக்க மனித சக்தியால் இழுக்கப்படும் இந்த திரு தேரோட்டத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் பங்கேற்பார்கள்.

வரும் 13ஆம் தேதி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 21 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் சூழலில் நெல்லை பேட்டை தீயணைப்பு துறையினர் சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் குடவரை வாயில் மண்டபத்தில் அமைந்துள்ள மர சிற்பங்கள் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் விநாயகர் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் திருத்தேர்களை தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம் சுமார் 13,500 லிட்டர் தண்ணீர் கொண்டு நவீன மோட்டார்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 226 மையங்கள் அமைப்பு

காசி விசுவநாதர் கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை