கீழே இறங்க முடியாமல் தவித்தவரை கயிறு கட்டி இறக்கிய தீயணைப்புத் துறையினர்
துக்க நிகழ்ச்சிக்காக மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மைக் செட் கட்டிய நபர் தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தவரை கயிறு கட்டி இறக்கிய தீயணைப்புத் துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கசவனபட்டியில் அன்பு என்பவர் மைக் செட் அமைப்பாளர் வேலை செய்து வருகிறார். இன்று கசவனம்பட்டி பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறி கூப்பபுவடிவ ஒலிப்பானை உள்ளார்.
அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தண்ணீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளார். வெகு நேரமாக அவர் கீழே இறங்காததால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.