in

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு…. அனுமதி கிடைக்குமா? பதிலளிக்க உத்தரவு

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு…. அனுமதி கிடைக்குமா? பதிலளிக்க உத்தரவு

இவர் எதை செய்தாலும் செய்யாவிட்டாலும் சர்ச்சை தான். இவர் என்ன பண்னாலும் பிரச்சினையாக்கவே ஒரு கூட்டம் காத்துட்டு இருக்கும். இவருடைய ஒவ்வொரு படமும் வெளியாகும் போது ஒரு பிரலயமே நடக்கும், ரிலீஸ் ஆன பிறகும் சர்ச்சை வெடிக்கும் நடிக்கும் போதே எவ்வளவு பிரச்சனை என்றால் அரசியல் வந்ததுக்கு அப்புறம் கேட்கவா வேணும்.

இவர் கட்சி ஆரம்பிச்சதில் இருந்து பிரச்சினையாகவே போயிட்டு இருக்கு சென்ற வாரம் அறிமுகப்படுத்திய தமிழக வெற்றி கழக கட்சியின் கொடி…க்கு எதிராக பகுஜன் சமாஜ் காட்சி நோட்டீஸ் விட்டது.

தற்பொழுது விஜய் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் மாநாட்டை நடத்த விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியை அடுத்த வி.சாலை யில் உள்ள 85 ஏக்கர் அளவில் உள்ள பகுதியை தேர்வு செய்திருக்கிறார்.

அதற்கான வாடகையும் உரிய நபரிடம் கொடுத்திருக்கின்றார். பாதுகாப்பு கேட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் மனு கொடுத்திருக்கின்றார்.

அன்று மாலையை மாநாடு நடத்தும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீஸ் சூப்பரண்டன் ஒரு வாரமாகியும் காவல்துறை சார்பில் இருந்து அனுமதி எதுவும் வழங்காமல் இழுத்து அடித்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை ஒட்டி மாநாடு நடைபெறுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று போலீசார் யோசித்து வருகிறார்கள். மேலும் மாநாட்டை நடத்துவதற்கு தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்சியின் சார்பில் எடுக்கப்பட்டிருக்கின்றதா? என்று 21 கேள்விகளுக்கு பதில் கேட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இவர்கள் வழங்கும் பதில்களை பொறுத்து மாநாட்டை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒருவேளை காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்டால் சென்னை ஹைகோர்ட் அணுகி அனுமதி பெறலாம் என்ற திட்டமும் இருக்கிறதாம்?

What do you think?

குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

மத்திய அரசின் நிதி கொடுக்க முடியாது பாஜக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் இராம.ஸ்ரீனிவாசன் பேட்டி