சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருட அபிஷேக விழா நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் முதலாமாண்டு வருட அபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக விநாயகர் சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட நவ கலசங்களை வைத்து யாககுண்டம் அமைத்து கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்கியது
தொடர்ந்து கோ பூஜை நவக்கிரக ஹோமம் விநாயகர் மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து புர்ணாகுதி அளிக்கப்பட்டன பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து தீப ஆராதனை காண்பித்தவுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது இதனை தொடர்ந்து கோவிலை சுற்றி வளம் வந்து மூலவர் செல்வவிநாயக பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது
பின்னர் வெள்ளிக்கவசம் அணிவித்து வண்ண மலர்மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்று கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் மற்றும் ஷோடச உபச்சாரங்கள் செய்து புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ விநாயக பெருமானை வழிபட்டனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.