in

ஐந்து வருடமாக சேமித்த ஐந்து ரூபாய் நாணயம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவி


Watch – YouTube Click

ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம் ஐந்து ரூபாய் போதும்!

ஐந்து வருடமாக சேமித்த ஐந்து ரூபாய் நாணயத்தை சில்லறையாக மூட்டை கட்டி எடுத்து வந்து தபால் நிலையத்தில் சேமித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுச்சேரி மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது

புதுச்சேரி முதலியார் பேட்டை சேர்ந்த லட்சுமி நாராயணன் லட்சுமி ஆகியோரின் இளைய மகள் ரிஷ்விதாஸ்ரீ இவர் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் ரிஷ்விதாஸ்ரீவிற்கு சிறுவயது முதலில் ஐந்து ரூபாய் நாணயம் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் பள்ளி செல்லும் பொழுதும் சாக்லேட் மற்றும் தனி செலவுக்காக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பணம் கொடுத்தால் ஐந்து ரூபாய் நாணயம் வேண்டும் என அடம் பிடித்து வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார் மேலும் தீபாவளி பொங்கல் போன்ற தினங்களில் அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம் என மறுத்து தனக்கு பிடித்த ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டுமே வாங்கிக் கொள்வாராம்

அப்படி ஐந்து ரூபாய் நாணயத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ரிஷ்விதாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்து ரூபாய் நாணயத்தை தனது பெற்றோர்கள் ஆசையாக வாங்கிக் கொடுத்த உண்டியலில் சேமிக்க தொடங்கினார் கடந்த ஐந்து வருடமாக ரூபாய் 3000 சேமித்த அவர் இன்று புதுச்சேரி முதலியார் பேட்டை தபால் நிலையத்தில் தனது பெயரில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கி தொடர்ந்து சேமிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு தனது பெற்றோர் மற்றும் சகோதரி உடன் தான் சேமித்து வைத்த உண்டியலுடன் ஐந்து ரூபாய் வெறும் சில்லறை நாணயங்களை மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு வந்தவர் தபால் நிலைய அதிகாரிகள் தாமோதரன் துணை அதிகாரி சாருமதி ஆகியோரிடம் சேமித்த நாணயத்தை சில்லறையாக தட்டில் வைத்து வழங்கி சேமிப்பின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

இது அங்கு இருந்த தபால் நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் வியந்து பார்த்தனர் மேலும் சிறு வயது முதல் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தனக்கு பிடித்த ஐந்து ரூபாய் நாணயத்தை 5 வருடமாக சேமித்து மத்திய அரசின் திட்டமான சிறு சேமிப்புத் திட்டத்தில் தபால் நிலையத்தில் சேமித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறுமியை வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினார்கள் மேலும் மாணவியின் செயலை புதுச்சேரி பாஜக மாநில செயலாளர் வெற்றி செல்வம் பாராட்டி சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார்


Watch – YouTube Click

What do you think?

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது

நாட்டுப்புறக்கலைவிழா 2024 ஜோதி சிலம்பம் சத்ரியகுருகுலம் பூரணாங்குப்பத்தில் நடைபெற்றது