in

யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் அனுப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்


Watch – YouTube Click

யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் அனுப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

 

பழனி அருகே விவசாய நிலங்களை சேதபடுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்து விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோம்பைபட்டி, ஆயக்குடி, சட்ட பாறை, கொடைக்கானல் மலை அடிவார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பத்துக்கும் மேற்பட்ட யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா போன்ற விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் 20 மேற்பட்ட வன அலுவலர்கள் நியமிக்கபட்டு 2 மேற்பட்ட குழுக்கள் அமைத்து யானைகளை காப்புக் காட்டுப் பகுதிக்குள் அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் யானைகளை விரட்டும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் அனுப்பும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

15 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள் கண்டு கொள்ளாத மின்சார வாரிய அதிகாரிகள்

நடிகர் பிரேம்ஜி திருமணத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு