in

பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு


Watch – YouTube Click

வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுத்தை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி சிறுத்தை ஒன்று அரியலூர் மாவட்டத்தில் சுற்றி திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது

மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை நீர் வழி பாதை வழியாக அரியலூர் மாவட்டம் சென்று இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்து இரண்டு நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பிறகு தனது தேர்தல் வேட்டையை மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறுத்தியது இந்நிலையில் ஏற்கனவே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் தென்பட்டதாகவும் ஒரு நாயை தூக்கி செல்லும் பொழுது நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும் நேற்று இரவு அதனை நேரில் பார்த்த கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காலடி தடைகளை ஆய்வு செய்தனர் இதில் சற்று பெரிதான காலடி தடம் ஒன்றை கண்டுபிடித்து அதனை சுற்றி அடையாளம் என்று பாதுகாப்பாக வைத்துள்ளனர் இதனால் சிறுத்தை மயிலாடுதுறையில் காட்டு பகுதியில் இருந்ததா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது ஆனால் நேரில் பார்த்த வருடம் விசாரிக்க சென்றபோது காவல்துறையினர் எந்த தகவலும் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளதாக அவர் பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை

சுடுகாடு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை