in

The forest department released the tagged baby turtles into the sea.

பொறிக்கப்பட்ட ஆமைக் குஞ்சுகளை வனத் துறையினா் கடலில் விட்டனா்

 

ராமநாதபுரம் அருகே பொறிக்கப்பட்ட ஆமைக் குஞ்சுகளை வனத் துறையினா் கடலில் விட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வனச்சரகத்துக்குள்பட்ட வாலிநோக்கத்தில் வனத் துறையினரால் 10-க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சு பொரிப்பகத்தின் சாா்பில் முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், வாலிநோக்கம் கடற்கரைப் பகுதியில் பொறிக்கப்பட்ட 127 ஆமைக் குஞ்சுகள் ராமநாதபுரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஸ் தலைமையில் கடலில் விடப்பட்டன.

நிகழாண்டில் இதுவரை 3 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

What do you think?

திருவாடானையில் சற்று முன் பெய்து வரும் கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

கும்பகோணத்தில் வைணவத்தலங்களில் மாசிமக பிரமோற்சவ திருத்தேர்