சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட வனத்துறையினர்
மணிமுத்தாறு மலையடிவார கிராமங்களில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க தீவிர முயற்சி.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அடிவாரப் பகுதியில் உள்ள வீடுகளில் வளர்த்து வரும் நாய், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அவ்வப்போது மலையில் இருந்து வரும் சிறுத்தையானது வேட்டையாடி செல்வது வழக்கம்.
அதுமட்டுமின்றி அவ்வப்போது யானைகள், காட்டுப்பன்றி, கரடி போன்ற வன விலங்குகள் அடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மேச்சலுக்கு சென்ற ஆடுகளை வேட்டையாடியது அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது மணிமுத்தாறு மலை அடிவார பகுதியில் வசிக்கும் பொதுமக்களே அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கைகளை வைத்திருந்த நிலையில்.
தற்போது களக்காடு முண்டந்துறை புலிகளுக்காக இயக்குனர் இளையராஜா அறிவுறுத்துதலின் பேரில் வனத்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சிறுத்தை நடமாடத்தை கண்காணித்து கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.