நெல்லை மக்களை உறைய வைத்த வேல ராமமூர்த்தி.. யின் பேத்தி திருமணம்
எழுத்தாளர் வேல ராமமூர்த்தி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் குணச்சித்திர, கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக பல படங்களில் நடித்து அண்மையில் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து ரசிகர்களின் வயிற்றேரிச்சளை வாங்கி கட்டி கொண்டார்.
வில்லன்….னா இப்படித்தான் இருக்கணும்…இன்னு கத்தி இன்றி ரத்தம் இன்றி முக பாவனையாலையே மிரட்டுபவர் வேல ராமமூர்த்தி. 2013 ஆம் ஆண்டு மதயானை என்ற படத்தின் முலம் அறிமுகமானவரின் குற்றபரம்பரை என்ற நாவலை படமாக்க பாலாமுயற்சி எடுத்த பொழுது இவருக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே பிரச்சினைகள் உருவானது.
தற்பொழுது அந்த நாவலை சசிகுமார் படமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வேலையா ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவியின் திருமணம் தான் தற்பொழுது கோலிவுட்டின் ஹாட் டாபிக். தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் என்பவரின் மகன் விஜய ராகுல் வேல ராமமூர்த்தி.. யின் பேத்தியை திருமணம் செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு வந்தவர்கள் வாய்பிளந்து அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். முழுக்க முழுக்க தங்கத்தை கொட்டி கல்யாணம் செய்திருகிறார்கள். மணமக்களின் கழுத்தில் அணிவித்த மாலை முழு தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது.
திருமணத்தின்போது மணமகள் அணிந்திருந்த நகை மட்டுமே 600 சவரன், இவரின் புடவை 8 லட்சம், பிளவுஸ் 3 லட்சம், நெல்லை ட்ரேட் சென்டரில் பல லட்ச ரூபாய் செலவு செய்து மண்டபம் போல் செட் போடப்பட்டது, சூப்பர் சிங்கர் பிரபலங்களின் கச்சேரியும் களைகட்டியது. வேல ராமமூர்த்தி வீட்டு திருமணம் தான் தற்போது இணையத்தில் செம Trend…ங்கில் இருக்கிறது.