காவலர்கள் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள்
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகாரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் வேளியே செல்லும் பொதுமக்கள் வெய்யிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தங்களது உடலை குளிர்ச்சியாக்க தர்பூசணி பழங்கள், இளநீர், மோர் மற்றும் ஜுஸ் சென்டர்களை நாடி செல்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் அனல்காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி திருபுவனை பகுதியில் உள்ள காவல நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் இளங்கோ ஏற்பாட்டில் காவல்நிலையம் வெளியே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் அவ்வழியாக வெய்யிலில் நடந்து செல்லும் பொதுமக்களை குளிர்விக்கும் வகையில் நீர், மோர், தர்பூசணி பழங்கள் மற்றும் குளிர்ச்சியை தரக்கூடிய பழ வகைகளை வழங்கி வருகின்றனர்.
இதனை மக்கள் ஆர்வமுடன் உண்டு வெப்பத்தை தணித்து செல்கின்றனர். வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் திருபுவனை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் செய்யும் இந்த செயலை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்..