புதுச்சேரி இந்தியாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க கீழூர் நினைவிடத்தை துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.
புதுச்சேரி விடுதலை பெற்ற காலத்தில் அதனை இந்தியாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க கீழூர் நினைவிடத்தை துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.
வாக்கெடுப்பில் கலந்த கொண்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூணைப் பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் அதனை அழகுபடுத்தவும், சுற்றுலாத் துறையின் மூலம் நினைவிடத்தை மேம்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
பிற்கால சந்ததியினருக்கு புதுச்சேரியின் விடுதலைப் போராட்ட வரலாறு தெளிவுபடும்படியான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தை பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் ஆயி மண்டபத்தை அழகுபடுத்தவும், பூங்கா சூழலை மேம்படுத்தவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்கள் குறித்த குறிப்புகளை பொதுமக்கள் அறிய எழுதி வைக்கவும் கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரியை பசுமை நகரமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு உள்ளாட்சித் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.