புனித ரமலான் பண்டிகை நெல்லை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
புனித ரமலான் பண்டிகை நெல்லை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாத்தின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் துவங்கும் நாளில் கடைபிடிக்க துவங்கப்படுகிறது.
வயதானவர்கள் இயலாதவர்கள் நீங்கலாக அனைவரும் ரமலான் நோன்பு இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாக உள்ளது. புனித மாதமான இம்மாதத்தின் துவக்க நாளில் இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை துவங்கினர் .
கடந்த ஒரு மாதம் காலம் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு வைத்து இறைவனை அவர்கள் வழிபட்டனர் தமிழகத்தில் நேற்றைய தினம் சவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி ரமலான் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பெருநாள் கூட்டுத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து ரமலான் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் முன்னாள் அமைச்சர் மைதீன் கான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான பேட்டை ஏர்வாடி பத்தமடை உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு வழிபட்டனர்.