in

திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் நடந்த பயங்கரம்


Watch – YouTube Click

கோவில் திருவிழாவிற்கு வரி பணம் கட்டாத சாராய வியாபாரி கொலை. திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் நடந்த பயங்கரம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் எண்ணக்குடி கிராமத்தில் சித்திரபட்டன் வீரன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி யன்று காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்பட்டு இரவு கிடா வெட்டி ஊருக்கே கறி விருந்து வழங்கப்படும்.அந்த வகையில் இந்த வருட சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு ஊர் நாட்டாண்மை அன்பழகன் முன்னிலையில் கோவில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிராமத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கோவில் திருவிழாவிற்காக ஒரு வீட்டிற்கு 1000 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட நிலையில் அதனை யார் யார் கொடுத்தார்கள் என்பது குறித்து பேசப்பட்டது.அப்போது அதே பகுதியில் உள்ள கோழி முட்டை என்கிற சந்திரசேகர் வயது 58 என்பவர் வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.இவர் மீது பேரளம் காவல் நிலையத்தில் தொடர் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டதால் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாராய வியாபாரி சந்திரசேகரன் மது போதையில் இந்த கூட்டற்கு வந்துள்ளார்.இவர் கோவில் திருவிழாவிற்கு வரி பணம் கொடுக்க வில்லை என முன்னாள் நாட்டாண்மை விஜயராகவன் கூறியுள்ளார்.இதன் காரணமாக சந்திரசேகருக்கும் விஜயராகவனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது விஜயராகவன் ஓடி வந்து கோழி சந்திரசேகரனை நெஞ்சில் எட்டி உதைத்ததால் தலையில் அடிபட்டு அவர் மயங்கி உள்ளார்.

இதனையடுத்து பேரளம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மயக்கம் அடைந்த சந்திரசேகரனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊர் முன்னாள் நாட்டாண்மை விஜயராகவனை பேரளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் நாளை கோவில் திருவிழா நடைபெற விருந்த நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடு கூட்டத்தில் இந்த கொலை சம்பவம் நடத்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவன் கோயிலில் சித்திரை தேரோட்டம்

150 ரூபாயில் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை அரசு பேருந்தில் சுற்றி வரலாம்