7 ஊராட்சி உறுப்பினர்கள் பதயை ராஜினாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாடுகளில் அதிருப்தியால் அதிமுக உள்ளிட்ட 7 ஊராட்சி உறுப்பினர்கள் பதயை ராஜினாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி ஊராட்சியில் அதிமுக ஆதரவு பெற்ற சுமத்ரா ரவி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
மேலும் இங்கு 9 ஊராட்சி உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் செயல்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தால் இன்று திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அதிமுகவை சேர்ந்த வார்டு உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தான கிருஷ்ண ரமேஷ் என்பவரிடம் ராஜினாமா கடிதத்தை ஒன்றிணைந்து வழங்கினர் .
மேலும் ராஜினாமா கடிதத்தில் தங்கள் வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தங்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை எனவும் இதனால் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாத அவலம் ஏற்பட்டு வருகிறது என ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளனர் .