in

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத கடைசி பிரதோஷ விழா

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத கடைசி பிரதோஷ விழா

 

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து தோஷங்களும் நீங்கும் மாசி மாத கடைசி பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த முத்தீஸ்வரர் ஆலயத்தில் தை மாதத்தில் வரும் கடைசி பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் நந்தி பகவான் மற்றும் மூலவர் முத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தூபதீப ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது .இதில் ஆலய அறங்காவலர்கள் தசரதன். கடம்பன் ஏகாம்பரம் .பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தை மாதத்தில் வரும் கடைசி பிரதோஷ விழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பேரருளை பெற்று சென்றனர்.

What do you think?

வெள்ளி யானை வாகனத்தில் சுப்ரமணியசாமி தெய்வானை வீதி உலா

திருவாடானையில் சற்று முன் பெய்து வரும் கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்