in

எம்ஜிஆர் நடித்த நவீன தொழில்நுட்பத்துடன் உருவான சிரித்து வாழ வேண்டும் திரைப்படம்

எம்ஜிஆர் நடித்த நவீன தொழில்நுட்பத்துடன் உருவான சிரித்து வாழ வேண்டும் திரைப்படம்

 

நெல்லை டவுன் ரத்னா திரையரங்கில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் திலகம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த நவீன தொழில்நுட்பத்துடன் உருவான சிரித்து வாழ வேண்டும் திரைப்படம் வெளியிடப்பட்டு ரசிகர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரும் அதிமுக மேலப்பாளையம் பகுதி அவைத்தலைவரும் உன்னால் மாமன்ற உறுப்பினருமான ஆறுமுகம், அதிமுக நிர்வாகிகள் கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், முன்னாள் மாமன்ற உறுப்பினர் குறிச்சி சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எம் ஜி ஆர் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு எம்ஜிஆரின் படம், மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் எம்.சி. ராஜன், ராசப்பா ஆவுடையப்பன் ,செல்வம், அஜிஸ், முருகன் பஷீர் சுந்தர் மூக்கன், ஜாகிர் உசேன், கிட்டு மற்றும் பெண்கள், இன்றைய தலைமுறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்ஜிஆரின் தீவிர பக்தர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம் செய்திருந்தார்.

What do you think?

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து ஆரவாரத்துடன் புறப்பட்ட த.வெ.க தொண்டர்கள்

நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது