மருத்துவமனையை திறந்து வைக்க போய் உலக நாயனை மட்டம் தட்டிய தலைவர்
சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையின் புதிய கிளையை திறந்து வைக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு உரையாற்றிய போது மீடியாக்கள் எல்லாம் வருவாங்க கொஞ்சம் பேச முடியுமா அப்படின்னு என்கிட்ட கேட்டாங்க இங்க வந்து பார்த்ததுக்கப்புறம் எனக்கு பயமே வந்துடுச்சு எத்தனை கேமரா???
ஏன்னா தேர்தல் நேரம் நான் ஏதாவது பேசினா அவங்க ஏதாவது இல்லாததும் பொல்லாததும் போட்டுவாங்கனு பயமா இருக்குது….
பேசுறதுக்கு மட்டும் இல்ல எனக்கு மூச்சு விட கூட பயமா இருக்குது.
இந்த சமயத்துல நான் சொல்றது என்ன…னா எப்பவுமே மருத்துவர்கள் மேலயும் செவிலியர்கள் மேலயும் நிறைய நம்பிக்கை இருக்கிறது.
அவர்களுடைய உதவியாளும், நவீன தொழில்நுட்பத்தாலும் தான் இன்று நான் உயிரோடு வாழ்ந்து இருக்கின்றேன்.
இப்போதெல்லாம் எந்த வயதில் யாருக்கு என்ன நோய் வரும் என்று கூற முடியாது காத்து தண்ணீர் எல்லாமே மாசுபட்டு விட்டது குழந்தைகளோட மருந்துல கூட கலப்படம் செய்றாங்க அவங்கள எல்லாம் சாகுற வரைக்கும் ஜெயில்ல போடனும் என்று கோபமாக பேசினார் ரஜினிகாந்த்.
மேலும் காவேரி மருத்துவமனை பல சினிமா நட்சத்திரங்களுக்கு சொந்த வீடு போல அங்கே தான் ஷூட்டிங் நடக்கும் சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை உடம்பிற்கு முடியலை…ன்னா இங்கு வந்து தான் மருத்துவம் பார்ப்பார்கள் ஏன் கலைஞர் கருணாநிதி கூட உடம்பு சரியில்லாத போது இங்குதான் ட்ரீட்மெண்ட் எடுத்தார்.
அப்படிப்பட்ட இந்த மருத்துவமனையின் ஒரு கிளையை நான் திறந்து வைப்பதற்கு பெருமையாக இருக்கிறது. அவ்வளவு நேரம் நல்லதா பேசிட்டு இருங்க தலைவரே திடீர்னு உலக நாயகனே வெச்சு இடையில ஒரு காமெடி பண்ணினாரா இல்ல அவரை மட்டம் தட்டுனாருன்னு தெரியல…இன்னு மேடைகள் கிசுகிசுத்தது ..
கமல் வீடு இருக்கும் போது யாராவது காவிரி மருத்துவமனைக்கு வழி கேட்டால் கமல் வீட்டு பக்கத்துல இருக்கிறதே அந்த மருத்துவமனை தான் என்று வழி கூறுவார்கள்.
ஆனால் இப்பொழுது நிலைமை மாறி காவேரி மருத்துவமனையின் பக்கத்தில் தான் கமல் வீடு இருக்கிறது என்று வழி கூறும் அளவிற்கு இந்த மருத்துவமனை பிரமாண்டமாக வளர்ந்து விட்டது என்று ரஜினி கூறினார்.
அவர் எந்த அர்த்தத்துல சொன்னாருன்னு தெரியல ஆனா மீடியாக்களோ அரசியல் ஆரம்பிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு கமல் இன்னும் அதே இடத்தில் தான் வளராம இருக்கிறார்.
ஆனா காவேரி மருத்துவமனை மட்டும் பிரம்மாண்டமாக வளர்ந்துடுச்சு அப்படின்னு போட்டு தள்ளி இருக்றாங்க..தலைக்கும் உலகத்துக்கும் சண்டை வர்றாமா இருந்த சரி.