திருத்துறைப்பூண்டியில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை சட்ட மன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்
தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் காந்தி ராஜன் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற இந்த ஆய்வில் திருத்துறைப்பூண்டி நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வைக்கு ஆய்வு செய்தனர் அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு கட்டப்படும் அறை குறித்தும் கேட்டறிந்தார் மேலும் மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தின் உள்ளே தண்ணீர் தேங்காதவாறு தரமாக பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினார்
தொடர்ந்து திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரில் உள்ள பள்ளி மாணவிகளின் விடுதியை ஆய்வு மேற்கொண்டார் அப்போது மாணவிகளின் தங்கு அறையில் சேதம் அடைந்துள்ள ஜன்னல் கதவுகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டனர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்த பின்னர் மதியம் சமையல் செய்து வைத்திருந்த தக்காளி சாதம் மற்றும் பொறியல் உணவை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எம் எல் ஏ ஆகியோர் சாப்பிட்டு பார்த்து உணவு அருமையாக உள்ளதாகவும் பாராட்டினர்.
ஆய்வின் போது திருத்துறைப்பூண்டியில் இரண்டாம் கட்ட புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பாலம் செந்தில்குமார் மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிரந்தரமாக செயல்பட பாதுகாப்பான புதிய இடத்தை வழங்க வேண்டும் என சட்டமன்ற ஆய்வு குழுவிடம் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது இந்த ஆய்வின்போது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் துர்கா நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.