in

கரூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு பல்வேறு இடங்களை ஆய்வு


Watch – YouTube Click

கரூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு பல்வேறு இடங்களை ஆய்வு

 

கரூரில் இன்று தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களை ஆய்வு குழு மேற்கொண்டு வருகிறது.

அப்போது பிற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மாணவி விடுதியை ஆய்வின் போது பல்வேறு பேருந்து நிறுத்தம் சாலை வசதி தெருவிளக்கு உள்ளிட்ட கோரிக்கையை வைத்தனர் அதை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்.

கரூர் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ,அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி, மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி புகலூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.

மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு நடத்திவிட்டு, வெங்ககல்பட்டியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின்போது, விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாணவிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

அப்போது மாணவிகள் தமிழக சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

விடுதிக்கு வரும் வழியில் சாலை வசதி மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

உடனடியாக மாணவிகளின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும், என உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

100 பேருந்துகளை விட்டு விட்டு பெருமை தேடி வருவது திமுக அரசு

இந்தியாவிலேயே அதிக அளவில் சாகித்யா அகடாமி விருதாளர்கள் பொருநை நதிக்கரையை சேர்ந்தவர்கள்