மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்
வேதாரணியம் அருகே சிறுதலைக்காடு ஜெயராமன் வாய்க்கால் தூர்வாரி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்; மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே சிறுதலைக்காடு கிராமத்தில் சுமார் 3000 மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலானோர் கடல் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர்.
இதில் சுமார் 750 மீனவ மக்கள் உள்ளனர் இவர்களிடம் 150 பைபர் படகுகளும் உள்ளது இவர்கள் பிரதானமாக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
மீன்பிடி தொழிலுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய ஜெயராமன் வாய்க்கால் கஜா புயலின் கோர தாண்டவத்தால் முற்றிலுமாக தூர்ந்துபோனது அதனால் 150 பைபர் படகுகளை கொண்ட மீனவர்களில் சுமார் 20 படகுகள் மட்டுமே தற்போது வரை கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் வாய்க்காலை தூர்வாரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அவர்களிடம் மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆட்சியர் இன்று சிறுதலைக்காடு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் இதில் 7 கிலோமீட்டர் தொலைவு கொண்ட வாய்க்கால் தூர்வார வேண்டும் எனவும் இதில் 4 கி. மீ வாய்க்காலும். மூன்று கிலோ மீட்டர் சதுப்பு நில பகுதியும் உள்ளது.
அதனை தூர்வாரினால் மட்டுமே மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கலாம் எனவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஜெயராமன் வாய்க்கால் விரைவில் தூர்வாரப்படும் என மாவட்ட ஆட்சியர் மீனவர்களுக்கு உறுதியளித்தார்.