in

புதுச்சேரி ஆட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடு நிர்வாக சீர்கேட்டை தட்டி கேட்க துணைநிலை ஆளுநர் கையில் சாட்டையை எடுக்க வேண்டும்

புதுச்சேரி ஆட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடு நிர்வாக சீர்கேட்டை தட்டி கேட்க துணைநிலை ஆளுநர் கையில் சாட்டையை எடுக்க வேண்டும்

புதுச்சேரி மாநில அதிமுக வலியுறுத்தல்

ஆட்சியல் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது இதனை ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால் நிர்வாகம் சீரழிந்து விடும் எனவும் கவலை

இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்…

புதுச்சேரியில் திறந்தவெளி பேனர் விளம்பரங்கள் தடைச் சட்டம் 2012 அமலில் இருக்கும் போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அதிகரிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் கூட்டம் போடுவது எதற்காக என்று கேள்வி எழுப்பினார்.

பேனர் விவகாரத்தில் புதுச்சேரி தலைமை நீதிபதியே உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதி இருப்பதில் இருந்து மாவட்ட ஆட்சியரின் செயல்படாத தன்மை தெரிகிறது,புதிய படங்கள் வரும் போது டிக்கெட் விற்பது மட்டுமே மாவட்ட ஆட்சியர்கள் வேலை இல்லை என்றார்.

ஆற்றுப்பகுதிகள் ஆற்றுக்கரையோர பகுதிகள் கபிலிகரம் செய்யப்படுகிறது இதன் மீது மாவட்ட ஆட்சியர் ஏதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா என்று கேள்வி எழுப்பிய அன்பழகன் அரசியல்வாதிகள் வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிடும் போது முதல்வர், அமைச்சர், தலைமை செயலர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.

புதுச்சேரியில் ஒவ்வொரு கார்டுக்கும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு 40 ஆயிரம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை, அந்த துறை சார்ந்த அமைச்சரின் இலாகா மாற்றப்பட்டுள்ளதே தவிர அந்த அமைச்சரை ஏன் மாற்றவில்லை என்றும் அதற்கு மாறாக போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் மானிய வழங்கப்படுகிறது என்றார்.

ஊழல் முறைகேடுகளை தட்டி கேட்க முதுகெலும்பு திராணி இல்லாத ஒரு அரசாக உள்ளது, துணைநிலை ஆளுநர் ஏரி குளங்களுக்கு சென்று பார்ப்பதை விட புதுச்சேரி ஆட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை தட்டி கேட்க கையில் சாட்டையை எடுக்க வேண்டும், ஆட்சியல் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது இதனை ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால் நிர்வாகம் சீரழிந்து விடும் என்றார்.

புதுச்சேரியில் பாண்டி மெரினா கடற்கரை போதைப் பொருள்களின் கேந்திரமாக விளங்குகிறது 50% போதை பொருட்கள் பாண்டி மெரினாவில் தான் விற்பனை செய்யப்படுகிறது இதை ஆதாரத்தோடு நிரூபித்தால் அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய தயாரா என்றார்.

What do you think?

ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ஆசிரியர் தின வாழ்த்து

நெல்லை பொருநை அருங்காட்சியகம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்