in

ராமஜென்ம பூமி வருவதற்கு மூல காரணம் ஜெயேந்திரர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பெருமிதம்

ராமஜென்ம பூமி வருவதற்கு மூல காரணம் ஜெயேந்திரர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பெருமிதம்

 

ராம ஜென்ம பூமி வருவதற்கு மூல காரணம் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.

அதனைத் தொடர்ந்து மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மதுரை எஸ் எஸ் காலனி எஸ்.எம். கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் குரு மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது

நான் மும்பை சண்முகானந்த ஹாலில் பேசிய போது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என் பேச்சை முழுமையாக கேட்டு ஆசீர்வதித்தார்.

உலகத்தில் சனாதன தர்மம் வாழ்ந்தால் உலகம் வாழும். நாம் வசுதேவ குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்திருக்கிற சத் சத்காரியம் ஏராளம்.

தர்மம் செய்தால் தர்மம் நம்மை காக்கும் என்ற சமூக சிந்தனையோடு உழைத்தவர்.

ராமஜென்ம பூமி வருவதற்கு வித்திட்டவர் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள். அதற்காக நிறைய பாடுபட்டார்.நிறைய கல்வி சாலைகள் பாதுகா மடங்கள், மருத்துவமனைகள் நிறுவியவர் . தன்னை ஒரு சமூக தொண்டனாகவே காட்டிக் கொண்டவர். ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ரமணர், பாம்பன் சுவாமிகள், சிருங்கேரி சுவாமிகள், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் மகா குரு. உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று தான் வாழ்ந்து, பிறரை வாழ செய்த மகான்கள் அவர்கள்.

ஞானிகள் பார்த்தால் நம் கர்மவினைகள் போகும் என்பதற்கு மகா பெரியவரின் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் உண்டு.அனுக்கிரகம் பெற ஒரு புள்ளி தேவைப்படுகிறது அதுதான் கோவில் என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

ரமணருக்கு புற்றுநோய் வந்த போது அதை அறுவை சிகிச்சை செய்து கொண்டு நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறிய போது வலி தான் வலிமை என்றார். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.

முன்பாக ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவுருவப்படத்திற்கு சந்தோஷ் மற்றும் நாராயணன் சாஸ்திரிகள் தலைமையில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

What do you think?

மறைந்த கலைஞர் குறித்து பேசிய மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாராட்டு

ராமேஸ்வரம் ஸ்ரீ தனுஷ்கோடி ஆதிமூல சித்த விநாயகர் ஆலயம் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்