in

பார்வை தெரியாதவரை ஏமாற்றி உணவு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை கடத்திச் சென்ற நபர் கைது


Watch – YouTube Click

பார்வை தெரியாதவரை ஏமாற்றி உணவு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை கடத்திச் சென்ற நபர் கைது
சீர்காழியில் சிறுமியை கடத்திச் சென்ற நபர் பொதுமக்கள் உதவியுடன் கைது. சிறுமி மீட்பு . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்,  பார்வை தெரியாமல் தெருவில் யாசகம் பெறுபவரை ஏமாற்றி உணவு வாங்கித் தருவதாக அவருடன் இருந்த சிறுமியை  கடத்திச் செல்லும் சி.சி.டி.வி. வெளியானது.
விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மாயவன் (40) இவர் இரண்டு  கண் பார்வையும் இழந்து ஊர் ஊராக சென்று பாட்டு பாடி  யாசகம் பெற்று வருகிறார்.
கண் பார்வை இல்லாத மாயவன் யாசகம் பெறுவதற்கு தனக்கு உதவி செய்வதற்காக  அவரது தங்கை  மகள்களை சிறுமிகள் 11 வயது, 12 வயது உடைய சிறுமிகளை உதவிக்கு அழைத்து வந்துள்ளார்.
இவ்வாறு மாயவன் சீர்காழி பகுதியில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது மணிக்கூண்டு பகுதியில் யாசகம் பெரும்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர்   கண் பார்வையில்லாத மாயவனை அழைத்து வந்து ஒரு கடையும் வாசலில் அமர வைத்துவிட்டு அவருடன் இருந்த 11 வயது சிறுமிக்கு உணவு வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
நீண்ட  நேரமாகியும் சிறுமி  திரும்பி வராததால் அச்சம் அடைந்த மாயவன் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அழுதவாறு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பொதுமக்கள் சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்து சிறுமியை கடத்தி சென்ற நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் சீர்காழி தோப்பு பள்ளி அருகே  இளைஞர் ஒருவருடன்  சிறுமி ஒருவர் அழுதவாறு செல்வதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
சிறுமியை கடத்திய நபர் சீர்காழி அடுத்த கோயில் பத்து பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (32) என்பது தெரியவந்தது. அவரை வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சிறுமி மீட்க்கப்பட்டு மாயவனிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியை இளைஞர் கடத்திச் செல்லும் சிசி டிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

“குழு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார்”- கு.ப.கிருஷ்ணன் பேட்டி

ஆட்சியாளர்கள் திருந்தாவிட்டால் சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் பெற முடியாது…திமுக அமைப்பாளர் சிவா பேட்டி.