in

 மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசி பெருவிழா

 மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசி பெருவிழா

 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும் இக்கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி முதல் மாசி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது
அதன்படி 26.02.2025 முதல் 10.3.2025 முடிய 13 நாட்கள் மாசி பெருவிழா நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவில் மகா சிவராத்திரி, மயான கொள்ளை, தீ மிதித்தல், திருத்தேர்விழா தெப்ப உற்சவம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

இந்த நிலையில் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் நெறிமுறை குறித்து காவல்துறையினர் உடன் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகபிரியா மேல்மலையனூர் மாசி பெருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக முதல்முறையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்ற செயல்களை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்ற செயலை தடுக்க மாவட்ட முழுவதும் இருந்தும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை